ADDED : பிப் 10, 2024 05:06 AM
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள செங்காத்தங்குடி பகுதி கண்மாயில் மணல் திருட்டு நடப்பதாக வி.ஏ.ஓ., பிரவீனுக்கு தகவல் கிடைத்தது.
டிப்பர் லாரி ஒன்றில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். வி.ஏ.ஓ., மற்றும் போலீசாரை பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். மணல் லாரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.