Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி வனப்பகுதியில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை

ஊட்டி வனப்பகுதியில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை

ஊட்டி வனப்பகுதியில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை

ஊட்டி வனப்பகுதியில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை

ADDED : பிப் 09, 2024 11:17 PM


Google News
ஊட்டி;ஊட்டி பார்சன்ஸ் வேலி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார், விசாரித்து வருகின்றனர்.

ஊட்டி பார்சன்ஸ் வேலி வனப்பகுதியில், 'டிரான்ஸ்பார்மர்' அருகில், அடையாளம் தெரியாத நிலையில், 35 முதல், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்களுக்கு, துர்நாற்றம் வீசியுள்ளது.

வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நஞ்சநாடு பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஹரி பிரியதர்ஷினி கொடுத்த புகாரின்படி, பைக்காரா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., குமனவேந்தன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி, ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு சேர்த்தனர்.

போலீசார் கூறுகையில், 'இறந்தவரின் முகத்தில் காயம் இருப்பதால், வனவிலங்குகள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம். உறவினர்கள் இல்லாமல், பிரேத பரிசோதனை முடியாத நிலை உள்ளது. யாரும் வராத பட்சத்தில், உடல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us