Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்

பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்

பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்

பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்

UPDATED : பிப் 10, 2024 10:02 PMADDED : பிப் 10, 2024 09:23 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.

சென்னையில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், செக்குடியரசின் டாலிபோர் ஸ்வர்சினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 55 நிமிடம் நீடித்த போட்டியில் சுமித் நாகல் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் லுாகா நார்டி, சீனதைபேயின் சுன்-ஹசி டிசெங் மோதினர். இதில் நார்டி 6-4, 4-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் நார்டி, சுமித் நாகல் மோதுகின்றனர்.

மைனேனி-ராமநாதன் ஜோடி சாம்பியன்

இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த ரித்விக், நிக்கி பூனாச்சா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 3-6 என இழந்த மைனேனி-ராமநாதன் ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய மைனேனி-ராமநாதன் ஜோடி 10-5 என வென்றது. ஒரு மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் மைனேனி, ராமநாதன் ஜோடி 3-6, 6-3, 10-5 என வெற்றி பெற்று கோப்பை வென்றது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us