Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'பொருளாதார வல்லரசாக வழிவகுத்தவர் நரசிம்மராவ்'

'பொருளாதார வல்லரசாக வழிவகுத்தவர் நரசிம்மராவ்'

'பொருளாதார வல்லரசாக வழிவகுத்தவர் நரசிம்மராவ்'

'பொருளாதார வல்லரசாக வழிவகுத்தவர் நரசிம்மராவ்'

ADDED : பிப் 10, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
சென்னை:'இந்தியா பொருளாதார வல்லரசாக வழிவகுத்தவர் நரசிம்மராவ்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, இந்தியாவின் மிக உயரிய, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே விருதுக்கு முழு தகுதி பெற்றவர்கள்.

விவசாய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் பிரதமராக உயர்ந்த சரண்சிங், விவசாயிகளின் நலனுக்காக போராடி, பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். அவரது பிறந்த நாள் தான் தேசிய விவசாய நாளாக கொண்டாடப் படுகிறது.

பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த இந்தியாவில், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து, இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வழிவகுத்தவர் நரசிம்மராவ்.

இந்தியா உணவு பஞ்சத்தில் தவித்தபோது, பசுமை புரட்சியை முன்னின்று நடத்தி, நாட்டின் உணவு உற்பத்தி அதிகரிக்க காரணமானவர், எம்.எஸ்.சுவாமிநாதன். இந்தத் தலைவர்களின் உழைப்புக்கும், தொண்டுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருது சிறந்த அங்கீகாரம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us