/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்கடலுார் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலுார் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலுார் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலுார் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : பிப் 10, 2024 05:46 AM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் தை அமாவாசையை முன்னிட்டு இறந்த மூதாதையர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை, ஆடி மற்றும் மாகாளய அமாவாசை நாட்களில் கடற்கரை உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் இறந்த மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தால் சந்ததியினர் வாழ்கை மேம்படும் என்பதால் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று தை அமாவாசை என்பதால் இறந்த மூதாதையர்களுக்கு கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கடலில் புனித நீராடி, திதி கொடுத்தனர்.