/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பூச்சொரிதல் ரத ஊர்வலம்திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பூச்சொரிதல் ரத ஊர்வலம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பூச்சொரிதல் ரத ஊர்வலம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பூச்சொரிதல் ரத ஊர்வலம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பூச்சொரிதல் ரத ஊர்வலம்
ADDED : பிப் 10, 2024 01:39 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
இக்கோயில் மாசி திருவிழா பிப்.8ல் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது. நேற்று நடந்த பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மனை வரவேற்கும் வகையில் பக்தர்கள் வண்ண கோலமிட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி துவங்கியது. மேற்கு ரத வீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம், கிழக்கு,
தெற்கு ரத வீதிகளின் வழியாக அம்மன் பூ அலங்கார ரதம் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் பூக்களுடன் காத்திருந்து மலர்துாவி அம்மனை வரவேற்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்க்க சேவை செய்தனர். சுற்றுப்புற கிராம மக்களும் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். விழாவையொட்டி நாளை சாட்டுதல், பிப்.13ல் கொடியேற்றம், பிப்.24ல் தசாவதாரம், பிப்.25ல் மஞ்சள் நீராட்டு, பிப்.27ல் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.