Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

Latest Tamil News
சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாமே என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அரியலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவசங்கர் (தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர்) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்விரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சிவசங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் மீது விசாரணை நடத்திய நீதிபதி இளந்திரையன், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தப்பட்டதாக கூறி அவற்றை தள்ளுபடி செய்தார்.

இந்த விசாரணையின் ஒருபகுதியாக சில கருத்துகளையும் அவர் முன் வைத்துள்ளார். இதுபோல அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து கோர்ட்டுக்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக உடனடி அபராதம் விதிக்கலாமே என்ற யோசனையையும் தமிழக அரசுக்கு நீதிபதி இளந்திரையன் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us