Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எருமை தாக்கி பலியானவருக்கு நிவாரணம் இரண்டாம் நாளில் முடிந்த போராட்டம்

எருமை தாக்கி பலியானவருக்கு நிவாரணம் இரண்டாம் நாளில் முடிந்த போராட்டம்

எருமை தாக்கி பலியானவருக்கு நிவாரணம் இரண்டாம் நாளில் முடிந்த போராட்டம்

எருமை தாக்கி பலியானவருக்கு நிவாரணம் இரண்டாம் நாளில் முடிந்த போராட்டம்

ADDED : பிப் 10, 2024 07:08 AM


Google News
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகரை அடுத்த காராச்சிக்கொரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 40; பைக் மெக்கானிக்கான இவர், கூலி வேலைக்கும் செல்வார். இந்த வகையில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா வன கிராமத்துக்கு கூலி வேலைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது எருமை தாக்கியதில் இறந்தார்.

ஆனால், காட்டெருமை தாக்கி பலியானதாக கூறி, குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சடலத்தை எடுக்க விடாமல், நேற்று முன்தினம் தெங்குமரஹாடா வன கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை சத்தி அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போதும் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து, மீண்டும் அவரது உறவினர்கள், வனவிலங்கு தாக்கி இறப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும், 10 லட்சம் ரூபாய் நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக புலிகள் காப்பக நிதியிலிருந்து, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்குகிறோம். அவரை தாக்கிய எருமை காட்டெருமை வகையை சார்ந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் உறுதி செய்யப்பட்டால், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க பரிந்துரை செய்வது குறித்து, உயரதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து உடலை, குமாரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இதனால் இரண்டு நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us