/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெண் வேடமிட்டு லாரி டிரைவர்களிடம் வழிப்பறி: நால்வர் கைதுபெண் வேடமிட்டு லாரி டிரைவர்களிடம் வழிப்பறி: நால்வர் கைது
பெண் வேடமிட்டு லாரி டிரைவர்களிடம் வழிப்பறி: நால்வர் கைது
பெண் வேடமிட்டு லாரி டிரைவர்களிடம் வழிப்பறி: நால்வர் கைது
பெண் வேடமிட்டு லாரி டிரைவர்களிடம் வழிப்பறி: நால்வர் கைது
திருப்பூர் : இரவு நேரத்தில் பெண் வேடமிட்டு, லாரி டிரைவர்களிடம் பணம், பொருட்களை பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை போலீசார் சேலம் கொண்டலபட்டி பொன்பரப்பு பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் பெருமாள் (26), திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த தனகோடி மகன் சிவா (39), கொண்டலப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்த ராமசாமி மகன் ரவி (31), திருவண்ணாமலையை சேர்ந்த சக்ரவர்த்தி மகன் அண்ணாமலை (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இகுறித்து எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறியதாவது: இரவு நேரங்களில் ரோட்டோரத்தில், மரத்துக்கு கீழே சேலை கட்டி பெண் வேடத்தில் நின்று கொண்டு, அவ்வழியே வரும் லாரி டிரைவர்களை விபச்சாரத்திற்கு அழைப்பது போல் 'டார்ச் ' அடித்து சிக்னல் கொடுப்பர். அந்நேரத்தில் சபலமடையும் லாரி டிரைவர்கள் ஓரமாக லாரியை நிறுத்தி, இறங்குவர். இருட்டில் மறைந்திருக்கும் மற்ற மூவரும், டிரைவரை தாக்கி, பணம், மொபைல்போன் லாரியிலுள்ள பொருட்களை அபகரிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
லாரி வெளிச்சத்தில் ஈர்க்கும் வகையில் மின்னும் சேலை அணிந்து நிற்பதோடு, பெண்ணை போலவே நளினமாக நடித்து லாரி டிரைவர்களை அழைக்கின்றனர். பெண் என நம்பி வந்த டிரைவர்கள் பலரும், பணம் மற்றும் பொருட்களை இழந்துள்ளனர். சபல புத்தியால் பொருட்களை பறி கொடுக்கும் லாரி டிரைவர்கள் பலரும் புகார் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து வந்த புகாரையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது; குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட நான்கு பேர் மீதும் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை திருச்செங்கோடு, வென்னத்தூர், சங்ககிரி, சேலம், திண்டுக்கல் மற்றும் அவினாசி போலீஸ் ஸ்டேஷன்களில், மொபைல்போன் திருட்டு, வழிப்பறி, பைக் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவ்வாறு எஸ்.பி., கூறினார்.