/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குட்கா கடத்தியவர் கைது; ஆட்டோ பறிமுதல்குட்கா கடத்தியவர் கைது; ஆட்டோ பறிமுதல்
குட்கா கடத்தியவர் கைது; ஆட்டோ பறிமுதல்
குட்கா கடத்தியவர் கைது; ஆட்டோ பறிமுதல்
குட்கா கடத்தியவர் கைது; ஆட்டோ பறிமுதல்
ADDED : பிப் 09, 2024 11:24 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஆட்டோவில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் ஆட்டோ ஓட்டி வந்தவர் கூனிச்சம்பட்டைச் சேர்ந்த ஏகநாதன், 54; என்பதும், புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் பகுதியிலிருந்து தமிழக எல்லையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடன் போலீசார் அவரை கைது செய்து, 50 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.