ADDED : ஜூலை 17, 2011 01:12 AM
குறிச்சி : சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில், தனியார் மொபைல்போன் விற்பனை கடை உள்ளது.
இதனை, மணிகண்டன்(23) நடத்தி வந்தார். இங்கு மெமரி கார்டில், ஆபாச படங்கள் டவுன்லோடு செய்து விற்கப்படுவதாக, போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ., சுவாமிநாதன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் அக்கடையில் சோதனை நடத்தினர். புதிய தமிழ்ப்படங்கள் மற்றும் ஆபாச படங்கள் அடங்கிய மெமரி கார்டுகள் காணப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், டவுன்லோடு செய்ய பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.