ADDED : பிப் 10, 2024 04:32 AM
பரமக்குடி: பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் கே.ஜி., குழந்தைகளுக்கான 7 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்தார். டாக்டர் சகாதேவன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பிரைமரி பள்ளி தலைமை யாசிரியை ஜெயசுதா வரவேற்றார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குழந்தைகளின் பெற்றோர் மேடை ஏறி பட்டங்களை பெற்றனர். தொடர்ந்து பெற்றோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன. செகண்டரி தலைமையாசிரியர் அணில் நன்றி கூறினார்.