Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ADDED : பிப் 10, 2024 07:46 AM


Google News
கிருஷ்ணகிரி : கெலமங்கலம் வட்டாரத்தில், அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

இது குறித்து கெலமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கலா, நிருபர்களிடம் கூறியதாவது: கெலமங்கலம் வட்டாரத்தில் இந்த ஆண்டில் தாவரக்கரை, ராயக்கோட்டை, பைரமங்கலம், ஒசபுரம், திம்ஜேபள்ளி ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து திட்டங்கள், மானியங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 5 கிராம பஞ்சாயத்துகளிலும் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மின்சாரம், கூட்டுறவு, மீன் வளம், பட்டு வளர்ச்சி, வருவாய், சுகாதாரத்துறை மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் வரும், 28ல் இதே, 5 பஞ்சாயத்துகளிலும், அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மீண்டும் நடக்க உள்ளதால், விவசாயிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us