/உள்ளூர் செய்திகள்/சென்னை/நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைதுநண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது
நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது
நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது
நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது
ADDED : பிப் 10, 2024 12:25 AM
அமைந்தகரை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்சர் அலி 21. அமைந்தகரையைச் சேர்ந்த மோகன்ராஜ், 24, லோகு, 23 மற்றும் கோபிநாத், 28, ஆகியோருடன் அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம், நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மோகன்ராஜ் மற்றும் கோபிநாத் இருவரும் சேர்ந்து, அப்சர் அலியை சரமாரியாக தாக்கி வெட்டினர். தடுக்க வந்த லோகுவிற்கும் வெட்டு விழுந்தது.
காயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரித்த அமைந்தகரை போலீசார், மோகன்ராஜ், கோபிநாத் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.