/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மருந்தாளுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மருந்தாளுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மருந்தாளுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மருந்தாளுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மருந்தாளுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 10, 2024 07:38 AM
கிருஷ்ணகிரி : தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை, கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதுலிங்கம், மாநில செயலாளர் பெருமாள், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, சாலை ஆய்வாளர் சங்கம் முருகேசன், மீன்வளத்துறை மாநில பொருளாளர் நத்தகுமார், நகராட்சி, மாநகராட்சி சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள, 1,400க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை, மக்கள் நலன் கருதி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வழியாக, போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். கொரோனாவில் உயிரை பணயம் வைத்து, பணியாற்றிய மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு, கொரோனா ஊக்கத்தொகை வழங்க, உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 17 கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.