/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாஜி டி.ஜி.பி., வழக்கில் வரும் 12ல் கோர்ட் தீர்ப்புமாஜி டி.ஜி.பி., வழக்கில் வரும் 12ல் கோர்ட் தீர்ப்பு
மாஜி டி.ஜி.பி., வழக்கில் வரும் 12ல் கோர்ட் தீர்ப்பு
மாஜி டி.ஜி.பி., வழக்கில் வரும் 12ல் கோர்ட் தீர்ப்பு
மாஜி டி.ஜி.பி., வழக்கில் வரும் 12ல் கோர்ட் தீர்ப்பு
ADDED : பிப் 10, 2024 01:19 AM
விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடியானது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ஆதிசங்கரன் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மேலும் அவகாசம் கோரினார்.
அதற்கு மறுத்த நீதிபதி, ''மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, நாளை மறுதினம் வழங்கப்படும்,'' என்று உத்தரவிட்டார்.