/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சுற்றுச்சூழல் காக்கும் 'மஞ்சள்பை' திட்டம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு சுற்றுச்சூழல் காக்கும் 'மஞ்சள்பை' திட்டம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
சுற்றுச்சூழல் காக்கும் 'மஞ்சள்பை' திட்டம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
சுற்றுச்சூழல் காக்கும் 'மஞ்சள்பை' திட்டம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
சுற்றுச்சூழல் காக்கும் 'மஞ்சள்பை' திட்டம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
ADDED : பிப் 10, 2024 04:52 AM
சிவகங்கை,: ''சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவே தமிழகத்தில் முதன்முறையாக மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் பொருத்தியுள்ளனர்,'' என சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.
சிவகங்கையில் வனத்துறை சார்பில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வகித்தார். உதவி வன பாதுகாப்பாளர் மலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி, விவசாயிகள் ஆதிமூலம், கிருஷ்ணன், இயற்கை தன்னார்வலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கலெக்டருக்கு, மாவட்ட வன அலுவலர் மஞ்சள் பை வழங்கினார்.
கலெக்டர் பேசியதாவது, பாலிதீன் பயன்பாட்டை ஒழித்தால் தான், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
சில நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி காற்றில் மாசு ஏற்படாத சைக்கிள் ஓட்டுகின்றனர். பொது பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் மட்டுமே பயணிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் கருதியே தமிழக அரசு, முதன்முறையாக மஞ்சள் பை திட்டமும், இயந்திரம் மூலம் பை வழங்கப்படுகிறது. பாலிதீன் பை பயன்பாட்டை குறைத்தாலே, விற்பனை தானாக நின்றுவிடும்.
பசுமையை காக்கும் விதமாக கடந்தாண்டு மாவட்ட அளவில் 20 லட்சம் மரக்கன்று மற்றும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒரே நாளில் 4 லட்சம் பனை விதைகள் நடப்பட்டது.
பள்ளிகள் தோறும் மரக்கன்று நடப்படுகிறது. வனப்பரப்பு 33 சதவீதம் இருப்பது அவசியம். ஆனால், தமிழக வனப்பரப்பு 27 ஆகவும், சிவகங்கையில் 7.8 சதவீதமாக உள்ளன. மரக்கன்று நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பதின் மூலம் பசுமையான நாட்டை உருவாக்கலாம், என்றார்.