/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி... ரூ.52 கோடி ! :641 பணிகளுக்கு அனுமதிஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி... ரூ.52 கோடி ! :641 பணிகளுக்கு அனுமதி
ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி... ரூ.52 கோடி ! :641 பணிகளுக்கு அனுமதி
ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி... ரூ.52 கோடி ! :641 பணிகளுக்கு அனுமதி
ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி... ரூ.52 கோடி ! :641 பணிகளுக்கு அனுமதி
ADDED : பிப் 09, 2024 10:20 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 641 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அப்பணிகளுக்காக, 52.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனித தோமையார் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், குளம் துார்வாரி சீரமைத்தல், மழைநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள், 2006ம் ஆண்டில் இருந்து நடந்து வருகின்றன.
கடந்த 2022 --- 23ம் ஆண்டில், 454 பணிகள் செய்ய, 28 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், சாலைகள் சீரமைப்பு, மகளிர் சுய உதவிக் குழு கட்டடம், ஓரடுக்கு கப்பி சாலைகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, 2023 -- 24ம் ஆண்டில், கான்கிரீட் சாலை, மழைநீர் கால்வாய், ஓரடுக்கு சாலை, பேவர் பிளாக் சாலைகள் என, 641 பணிகள் செய்ய, 52 கோடியே 9 லட்சத்து 24 ஆயிரத்து 666 ரூபாய் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்துள்ளன.
இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கடந்த ஜன., மாதம் கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது, இந்த பணிகளை, வட்டார வளர்ச்சி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பணிகளை செயல்படுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஊராட்சிகளில் 641 பணிகள் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, ஆறு மாதங்களுக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,