/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு; 45 பேர் காயம்கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு; 45 பேர் காயம்
கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு; 45 பேர் காயம்
கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு; 45 பேர் காயம்
கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு; 45 பேர் காயம்
ADDED : பிப் 10, 2024 05:35 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகள், வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 704 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். 648 மாடுகள் கலந்து கொண்டதில் 49 மாடுகள் நிராகரிக்க 599 காலைகள் பங்கேற்றன.காளைகளை இணை இயக்குனர் ராம்நாத் ,உதவி இயக்குனர் அப்துல் காதர் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். 356 வீரர்கள் பங்கேற்றத்தில் 16பேர் நிராகரிக்கப்பட்டு 343 வீரர்கள் விளையாடினர்.
மாடுபிடி வீரர்களை வட்டார மருத்துவ அலுவலர் அசோக் குமார் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
வீரர்கள் உறுதிமொழியுடன் காலை 8:45 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
கிழக்கு தாசில்தார் முத்துராமன்,துணை தாசில்தார் தங்கமணி உடன் இருந்தனர்.முதலில் கோயில் காளை அவிழ்த்து விட யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் உள்ளூர் , வெளிமாவட்டங்களில் இருந்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.பல காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
13 வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 15 , பார்வையாளர்கள் 17 பேர் என 45 பேர் காயமடைந்தனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 காளைகளும் காயம் அடைந்தது. பாதுகாப்பு பணியில் புறநகர் டி.எஸ்.பி உதயகுமார்,இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி,ரமேஷ் குமார், எஸ்.ஐ., சிவராஜ் உட்பட 210 போலீசார் ஈடுபட்டிருந்தனர். வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டனர்.