பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 03:23 PM

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அனுப்கர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக, எல்லை பாதுகாப்பு படையினருக்கு புகார் வந்தது. எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தலை முறியடிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அனுப்கர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இருந்து வந்த 2 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
12 கிலோ ஹெராயின்
பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 6 கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.