Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு பிப்.13ல் வாயிற்கூட்டம்

போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு பிப்.13ல் வாயிற்கூட்டம்

போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு பிப்.13ல் வாயிற்கூட்டம்

போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு பிப்.13ல் வாயிற்கூட்டம்

ADDED : பிப் 10, 2024 04:39 AM


Google News
ராமநாதபுரம்: அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் பிப்.13 ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7ல் நடத்தப்பட்டது. இதில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பிப்.21ல் நடத்தப்படவுள்ளது.

இதனிடையே தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகங்கள் முன்பு வாயிற்கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஓய்வு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த பலனை வழங்கி 46 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ.3000 வழங்க வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us