/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் டோல்கேட்டில் டிரைவர்கள் தவிப்புபூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் டோல்கேட்டில் டிரைவர்கள் தவிப்பு
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் டோல்கேட்டில் டிரைவர்கள் தவிப்பு
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் டோல்கேட்டில் டிரைவர்கள் தவிப்பு
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் டோல்கேட்டில் டிரைவர்கள் தவிப்பு
ADDED : பிப் 09, 2024 08:16 PM

சோழவரம்:சோழவரம் அடுத்த விஜயநல்லுார் பகுதியில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் டோல்கேட் அமைந்து உள்ளது. இங்கு வாகன ஓட்டிகளின் வசதிக்காக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு, பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் நீண்டதுாரம் பயணம் செய்யும் டிரைவர்கள், அவசர உபாதைகளை கழிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இரவு நேரங்களில், லோடு வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்கள் அதிகாலையில் டோல்கேட் பகுதி வரும்போது, குளிக்க, அவசர உபாதகளை கழிக்க வசதியின்றி தவிக்கின்றனர்.
இதற்காக அங்குள்ள ஒதுக்குப்புறமான இடங்களை தேடி அலைகின்றனர். டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம், சுகாதார வளாகத்தை முறையாக பராமரிப்பதில்லை என டிரைவர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை நாள் முழுதும் திறந்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.