/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 09, 2024 11:48 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் 'ஐ பவுண்டேசன்' சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில், 'ஐ பவுண்டேசன்' டாக்டர்கள் குழுவினர், டிரைவர்கள், லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு, கண் பரிசோதனை செய்தனர். மொத்தம், 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.