/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை பள்ளி "தீ' விபத்தில் உயிரிழந்தகுழந்தைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலிகுடந்தை பள்ளி "தீ' விபத்தில் உயிரிழந்தகுழந்தைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
குடந்தை பள்ளி "தீ' விபத்தில் உயிரிழந்தகுழந்தைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
குடந்தை பள்ளி "தீ' விபத்தில் உயிரிழந்தகுழந்தைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
குடந்தை பள்ளி "தீ' விபத்தில் உயிரிழந்தகுழந்தைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
ADDED : ஜூலை 17, 2011 01:15 AM
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின்
ஏழாமாண்டு நினைவு தினமான நேற்று குழந்தைகளை இழந்த பெற்றோர், அரசியல்
கட்சியினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.கும்பகோணம் பாலக்கரையில்
உள்ள நினைவு மண்டபத்திலும், தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் நடந்த அஞ்சலி
கூட்டத்திலும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழநிமாணிக்கம், முன்னாள்
அமைச்சர் கோ.சி.மணி, எம்.எல்.ஏ., அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்
கல்யாணசுந்தரம், நகர்மன்றத் தலைவர் தமிழழகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து
அஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் ரெங்கசாமி,
துரைக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, நகர செயலாளர் சேகர், முன்னாள்
நகர செயலாளர்கள் மனோகரன், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சின்னையன் ஆகியோர்
மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர்
ராம்குமார், நகர செயலாளர் சங்கர், துணைத் தலைவர்கள் பிரகலாதன், பாலு,
சிவா, செயலாளர் முருகன், சுதர்சனன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினர்.இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநில குழு உறுப்பினர்
அருளரசன், தஞ்சை மாவட்ட தலைவர் பழனிவேல், செயலாளர் கரிகாலன் மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
நடராஜன், பாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கும்பகோணம கிளை
தலைவர் ராஜகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் செந்தில்
ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.கும்பகோணம் வக்கீல்கள் சங்கம்
சார்பில் அதன் தலைவர் சக்கரபாணி தலைமையில் ஏராளமான வக்கீல்கள் மலர்தூவி
அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவம், நகர செயலாளர் சேட்டு
தலைமையில் கட்சியினர் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு
பள்ளிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.