/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 1,000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிப்பு 1,000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிப்பு
1,000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிப்பு
1,000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிப்பு
1,000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிப்பு
ADDED : மார் 12, 2025 01:21 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே 1,000 ஆண்டு பழமையான கோவிலில், பாதாள அறை கண்ட றியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இது, ராஜராஜனின் ஐந்தாம் மனைவி பஞ்சவன் மாதேவியின் பள்ளி படை கோவிலாகும்.
இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. 17 ஆண்டுகளுக்கு பின், 61 லட்சம் ரூபாயில், கும்பாபிஷேக பணிகளுக்காக, 2023 ஜூலையில் பாலாலயம் நடந்தது.
தற்போது, திருப்பணிகள் நடந்து வரும் சூழலில், நேற்று கோவில் வடக்கு பிரகாரத்தில், பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதை, அறநிலையத்துறை இணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
வடக்குபுற பிரகார தரைதளத்தை சீரமைக்கும் பணியின் போது, அப்பகுதி உள்வாங்கியது.
தரைதளத்தை மேலும் அகற்றிய போது, 6 அடி ஆழம், 12 அடி நீளத்தில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், மண் நிறைந்திருப்பதால், உடனடியாக உள்ளே இறங்க போதிய வசதி இல்லை. விரைவில் உள்ளே இறங்கி ஆய்வு செய்யப்படும்.
பாதாள அறையை சுற்றி மக்கள் பார்வையிடும் வகையில் கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.