/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கப்' அடிக்குது; மூக்கை பிடித்து ஓடும் மக்கள்: தொற்று நோய் பரப்புமிடமாக மாறியது'கப்' அடிக்குது; மூக்கை பிடித்து ஓடும் மக்கள்: தொற்று நோய் பரப்புமிடமாக மாறியது
'கப்' அடிக்குது; மூக்கை பிடித்து ஓடும் மக்கள்: தொற்று நோய் பரப்புமிடமாக மாறியது
'கப்' அடிக்குது; மூக்கை பிடித்து ஓடும் மக்கள்: தொற்று நோய் பரப்புமிடமாக மாறியது
'கப்' அடிக்குது; மூக்கை பிடித்து ஓடும் மக்கள்: தொற்று நோய் பரப்புமிடமாக மாறியது
ADDED : பிப் 09, 2024 11:21 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, தமிழ்மணி நகருக்கு செல்லும் ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி தமிழ்மணி நகர், தாட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், தாட்கோ காலனி அருகே, புதியதாக கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது.
இப்பணிக்காக கழிவுநீர், திருப்பி விடப்பட்டதால், ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு முன், கழிவுநீர் குட்டை போல தேக்கி வைக்கப்பட்டது. தற்போது, பஸ் ஸ்டாண்ட் பணிக்காக கால்வாய் போன்று வெட்டி திறந்தவெளியில் கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த கழிவுநீர் தற்போது, தமிழ்மணி நகருக்கு செல்லும் ரோட்டின் நடுவே வழிந்தோடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை அருகே தேங்கி நிற்கிறது.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், நடந்து செல்வோர், கழிவுநீரை கடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து, உரிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதை தடுத்தால் பொதுச்சுகாதாரம் பாதுகாக்கப்படும். இவ்வாறு, கூறினர்.
தேங்கும் குப்பை
பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம், ரோட்டில் குப்பையை குவித்து வைத்துள்ளது. மேலும், ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சில நேரங்களில், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், குடியிருப்பு பகுதியை புகை சூழ்ந்து, சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் மக்கள் நிம்மதியடைவர்.