/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கருங்கல்பாளையத்தில் ஆற்றை தேடிய மக்கள்கருங்கல்பாளையத்தில் ஆற்றை தேடிய மக்கள்
கருங்கல்பாளையத்தில் ஆற்றை தேடிய மக்கள்
கருங்கல்பாளையத்தில் ஆற்றை தேடிய மக்கள்
கருங்கல்பாளையத்தில் ஆற்றை தேடிய மக்கள்
ADDED : பிப் 10, 2024 07:07 AM
தை அமாவாசைக்காக, ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரைக்கு, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க, ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இதன்படி நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, காவிரி ஆற்றங்கரைக்கு ஏராளமான மக்கள் வந்தனர்.
ஆனால், கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றை மறைத்து, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்திருந்தது. இதனால் வழிபாடு செய்ய வந்த மக்கள் திண்டாடி தவித்தனர். எள்ளு பிண்டத்தை கரைக்க, ஆகாயத்தாமரை செடிகளை கைகளால் அகற்றி தண்ணீரை கண்டுபிடித்து விட்டனர்.