Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் பஞ்சு மிட்டாய் சோதனை தடை பவுடர் உள்ளதா என ஆய்வு

சிவகங்கையில் பஞ்சு மிட்டாய் சோதனை தடை பவுடர் உள்ளதா என ஆய்வு

சிவகங்கையில் பஞ்சு மிட்டாய் சோதனை தடை பவுடர் உள்ளதா என ஆய்வு

சிவகங்கையில் பஞ்சு மிட்டாய் சோதனை தடை பவுடர் உள்ளதா என ஆய்வு

ADDED : பிப் 10, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: புதுச்சேரியில் 'ரோடமன் பி' கலர் பவுடர் கலந்து விற்ற பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதித்ததால், தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.

புதுச்சேரியில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் கலருக்காக 'ரோடமன் பி' ரோஸ் கலர் பவுடர் பயன்படுத்தியதற்கு தடை விதித்துள்ளனர்.

இதையடுத்து தமிழக அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பஞ்சு மிட்டாய் வியாபாரிகளிடம் உள்ள பஞ்சு மிட்டாய்களை பரிசோதனை செய்தனர்.

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் குடும்பமாக தங்கி, அங்கு பஞ்சு மிட்டாய் தயாரித்து மாவட்ட அளவில் விற்பனை செய்து வருவதை கண்டறிந்தனர்.

தடை செய்யப்பட்ட கலர் பயன்படுத்தி தயாரித்த பஞ்சு மிட்டாய்களை சாப்பிடுவதால் புற்றுநோய் எளிதில் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட கலர் பவுடர்களை பஞ்சு மிட்டாய்களை தயாரிக்க சேர்க்க கூடாது. அரசால் பரிந்துரைக்கப்பட்ட கலர் மட்டுமே சேர்க்க வேண்டும்.

தொடர்ந்து காரைக்குடியில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடத்திலும், ஆய்வு செய்தனர். பஞ்சு மிட்டாய் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து அனுப்பியுள்ளனர். சிவகங்கையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்து, மாதிரி எடுத்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்.

பஞ்சு மிட்டாய் ஆய்வு


உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்துள்ளனர். மாதிரியும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

தடை செய்யப்பட்ட கலர் பவுடர்களை பயன்படுத்தினால், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us