/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'டியூகாஸ்' சிறப்பு பேரவை கூட்டம்; துணை விதி திருத்தம் ஒத்திவைப்பு'டியூகாஸ்' சிறப்பு பேரவை கூட்டம்; துணை விதி திருத்தம் ஒத்திவைப்பு
'டியூகாஸ்' சிறப்பு பேரவை கூட்டம்; துணை விதி திருத்தம் ஒத்திவைப்பு
'டியூகாஸ்' சிறப்பு பேரவை கூட்டம்; துணை விதி திருத்தம் ஒத்திவைப்பு
'டியூகாஸ்' சிறப்பு பேரவை கூட்டம்; துணை விதி திருத்தம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 09, 2024 11:02 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்) நடந்த சிறப்பு பேரவை கூட்டத்தில், துணை விதி திருத்தம், இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு ஸ்தாபனங்களில், ஒரே மாதிரியான துணை விதிகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், சிறப்பு பேரவை கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது.
சங்கத்தின் இணை பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஒட்டுமொத்த துணைவிதி திருத்தம் மேற்கொண்டு, அதை அங்கீகரித்தல் குறித்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
உறுப்பினர்கள் காளிச்சாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர், துணை விதிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது இங்குள்ள அனைத்து உறுப்பினர்களாலும், தெளிவாக புரிந்து கொண்டு, துணை விதி திருத்தத்தை அங்கீகரிக்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, ஆங்கிலத்தில் உள்ள டியூகாஸ் துணை விதிகளை, தமிழில், அதன் பொருள் மாறாமல் மொழிபெயர்ப்பு செய்து, அதை உறுப்பினர்கள் முன்னிலையில் கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும்.
மொழிபெயர்ப்பு செய்யும் நபர்களுக்கு உதவியாக உறுப்பினர்கள் சார்பில், குழுவை ஏற்படுத்தலாம். அதுவரை துணை விதி திருத்தத்தை, இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, துணை விதி திருத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி, உயிர் உரம் உள்ளிட்ட இயற்கை வழி வேளாண்மை இடுபொருட்களை ஸ்தாபனமே தயாரித்து, விநியோகம் செய்ய பரிசீலனை செய்தல், புதிய வங்கி பிரிவு கிளைகள் துவங்குவது, ஏற்கனவே இயங்கி வரும் வங்கி பிரிவு கிளைகளை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.