ADDED : பிப் 10, 2024 12:22 AM
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்றுமுன்தினம் துவங்கியது. கோவை மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) ஜோதிமணி துவக்கிவைத்தார். மாணவ, மாணவியர் 94 பேர் இணைந்துள்ளனர். நுாலக வசதியுடன் கூடிய பயிற்சி மையத்தில், இலவச வகுப்பு நடைபெறுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு, மாணவர்களின் திறன் பரிசோதிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில், குரூப் - 4 தேர்வில் 14 மாணவர்கள்; குரூப் - 2 தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.