ADDED : பிப் 10, 2024 05:05 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் ராமபிரான் ஜடாயுவுக்காக தர்ப்பணம் செய்ததாக கருதப்படும் ஜடாயு தீர்த்தம் என்ற கோயில் ஊரணி உள்ளது.
அமாவாசையன்று மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ஏராளமானோர் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து, தொடர்ந்து சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.