ADDED : பிப் 10, 2024 12:24 AM
பள்ளிக்கரணை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ரேடியல் சாலை சந்திப்பில், தனியார் மருத்துவமனை அருகே மேம்பாலம் உள்ளது. வேளச்சேரி- - தாம்பரம் மார்க்கமாக செல்லும் பல்லாயிரம் வாகன ஓட்டிகள், இதில் பயணிக்கின்றனர்.
இந்த மேம்பாலத்தின் நடுவே, 20 அடிக்கு ஒரு மின்கம்பம் என, கடந்த ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் 10 மின் கம்பங்கள் வாகனங்கள் மோதியும், ஸ்திரத்தன்மை இழந்தும் விழுந்ததால் காணவில்லை. இதனால், இரவில் போதிய வெளிச்சமின்றி பயணிக்க, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.