ADDED : பிப் 10, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்த நிலையில் கடந்த, 2004 பிப்., 9ல் கிருஷ்ணகிரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
அதன்படி நேற்று வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கிருஷ்ணகிரி தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்கள் இணைந்து, கிருஷ்ணகிரி என ஆங்கிலத்தில், 250 அகல் விளக்கை ஏற்றி கொண்டாடினர். தலைமையாசிரியர் விஜயா, 'கிருஷ்ணகிரி தினம்' குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பட்டதாரி ஆசிரியர் முனிசாமி, இடைநிலை ஆசிரியர் சகாதேவன் உடனிருந்தனர்.