/உள்ளூர் செய்திகள்/தேனி/காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 10, 2024 05:48 AM
தேனி: தேனி வனச்சரகம் சார்பில், பூதிப்புரம் பெருமாள் கோயிலில் காட்டுத் தீ தடுப்பு முறைகள், மேலாண்மை திட்டம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தேனி ரேஞ்சர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வனவர் ஆனந்தபிரபு, காடுவன வளர்ப்பு திட்ட கிராம வனக்குழு நிர்வாகி முருகன், தேனி வனவர்கள் விக்னேஷ், காளிரத்தினம், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வனங்களை காப்போம்' உறுதிமொழி எடுத்தனர். போதிய மழை இல்லாததால் காடுகளில் மரம், செடி, கொடிகள், காய்ந்துள்ளன. கோடைக்காலங்களில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க பொதுமககள் சாலைகளில் செல்லும் போது புகைப்ப்பிடிப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில் தீ வைப்பவர்கள் முன்பே வனத்துறையில் அனுமதி பெறுவது அவசியம். காட்டுத்தீ குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். காடுகளில் வசிக்கும் பறவைகள், தேனீ பொன் வண்டு, சிட்டுககுருவி, பச்சைக்கிளி, வவ்வால் ஆகியவைகள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே,வனங்களை காத்து மழையை பெருக்கி, வன வளத்தை அதிகரித்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.