ADDED : பிப் 10, 2024 04:36 AM
தேவிபட்டினம்: நாரணமங்கலம், முத்துச்சாமிபுரம், சம்பை, கழனிக்குடி, இலந்தைக்கூட்டம், பொட்டகவயல், வாகவயல், கருப்பூர் பகுதிகளில் தற்போது இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
அறுவடை செய்யப்படும் நெல்லை அப்பகுதியில் முகாமிட்டுள்ள வியாபாரிகளிடம் விவசாயிகள் உடனடியாக எடை வைத்து விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூடைகளை வெளி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அனுப்புகின்றனர்.