'என்.பி.எப்.சி.,க்கள் கோரிக்கை நடைமுறைக்கு உகந்ததல்ல'
'என்.பி.எப்.சி.,க்கள் கோரிக்கை நடைமுறைக்கு உகந்ததல்ல'
'என்.பி.எப்.சி.,க்கள் கோரிக்கை நடைமுறைக்கு உகந்ததல்ல'
ADDED : பிப் 10, 2024 12:52 AM

மும்பை:என்.பி.எப்.சி., என்னும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஏற்கனவே சில ஒழுங்குமுறை நன்மைகளை அனுபவித்து வரும் நிலையில், வங்கிக்கான உரிமத்தை கோருவது நடைமுறைக்கு உகந்ததல்ல என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் தெரிவித்து உள்ளார்.
மேலும், சிறு கடன்களை வழங்கும் குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள், வட்டி விகிதம் தொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து, வங்கிகளாக மாறுவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
என்.பி.எப்.சி.,களின் உயர் மட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கான விதிமுறைகள் கூட உலகளாவிய வங்கிகளுக்கு இணையாக இல்லை. என்.பி.எப்.சி.,கள் சில நன்மைகளை இன்னும் அனுபவித்தே வருகின்றன.
என்.பி.எப்.சி.,கள் குறிப்பிட்ட பொருளாதார செயல்பாடுகளுக்கு சேவை வழங்கும் முக்கிய நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. வங்கியாக மாற்றம் பெற வேண்டும் என்ற இந்நிறுவனங்களின் கோரிக்கை நடைமுறைக்கு உகந்ததல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.