/உள்ளூர் செய்திகள்/கரூர்/கூடைப்பந்து போட்டியில் மின் வாரிய அணி வெற்றிகூடைப்பந்து போட்டியில் மின் வாரிய அணி வெற்றி
கூடைப்பந்து போட்டியில் மின் வாரிய அணி வெற்றி
கூடைப்பந்து போட்டியில் மின் வாரிய அணி வெற்றி
கூடைப்பந்து போட்டியில் மின் வாரிய அணி வெற்றி
ADDED : பிப் 10, 2024 10:22 AM
கரூர்: கரூரில் நடந்த அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியில், கேரளா மின் வாரிய அணி வெற்றி பெற்றது.
கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கடந்த, 9 முதல் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த போட்டியில், சென்னை வருமான வரித்துறை அணியும், கேரளா மின் வாரிய அணிகளும் மோதின. அதில், கேரளா மின் வாரிய அணி, 65-42 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு அரையிறுதி போட்டிகளும், நாளை இரவு இறுதி போட்டியும் நடக்கிறது.