சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்., விவகாரத்தில் ஒரு நபர் குழு விசாரணை
சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்., விவகாரத்தில் ஒரு நபர் குழு விசாரணை
சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்., விவகாரத்தில் ஒரு நபர் குழு விசாரணை
ADDED : ஜூலை 11, 2024 09:50 PM

மும்பை : பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு நபர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர். இவர், 2023 யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தைப் பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
தன் காரில் சிவப்பு, நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, கலெக்டர் அறையை பயன்படுத்தி ஆக்கிரமித்தது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சலுகையை தவறாக பயன்படுத்திய போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தது. இதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூஜா கேத்ர் குறித்து ஒரு நபர் குழு அமைத்து இரு வாரங்களில் அறிக்கை தர மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிடபட்டுள்ளது.