கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
UPDATED : ஜூலை 12, 2024 02:55 AM
ADDED : ஜூலை 11, 2024 08:52 PM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடுகிறது உச்சநீதிமன்றம்.
டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ள புதிய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேடுகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பியது. ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் வீட்டில் வைத்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பு, கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை விசாரணை நடத்திய நீதிபதி சஞ்சீவ் கண்ணா இன்று (ஜூலை 12) தீர்ப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.