ADDED : பிப் 10, 2024 10:30 AM
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 58 மூட்டை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 81.19 ரூபாய் முதல், 86.29 ரூபாய்; இரண்டாம் தரம், 61.89 ரூபாய் முதல், 71.05 ரூபாய் வரை, 2,379 கிலோ கொப்பரை, 1.82 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 11 மூட்டை வரத்தானது. கருப்பு ரக எள் கிலோ, 187.59 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 766 கிலோ எள், 1.43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
புன்செய்புளியம்பட்டி,ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 113 மூட்டை கொண்டு வந்தனர். நிலக்கடலை (காய்ந்தது) முதல் தரம் கிலோ, 68 ரூபாய் முதல் 72 ரூபாய்; இரண்டாம் ரகம், 65 ரூபாய் முதல் 67 ரூபாய் வரை, 2.98 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,260 ரூபாய்க்கு ஏலம்போனது. முல்லை பூ-1,490, காக்கடா-750, ஜாதி முல்லை-750, செண்டுமல்லி-30, கோழிகொண்டை-75, சம்பங்கி-120, அரளி-140, துளசி-40, செவ்வந்தி-140 ரூபாய்க்கும் விற்பனையானது.