/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாட்னாவுக்கு 10வது வெற்றி: புரோ கபடியில் கலக்கல்பாட்னாவுக்கு 10வது வெற்றி: புரோ கபடியில் கலக்கல்
பாட்னாவுக்கு 10வது வெற்றி: புரோ கபடியில் கலக்கல்
பாட்னாவுக்கு 10வது வெற்றி: புரோ கபடியில் கலக்கல்
பாட்னாவுக்கு 10வது வெற்றி: புரோ கபடியில் கலக்கல்
ADDED : பிப் 10, 2024 09:17 PM

கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 44-23 என மும்பை அணியை வீழ்த்தி 10வது வெற்றியை பெற்றது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் பாட்னா, மும்பை அணிகள் மோதின. மும்பை அணி 'டாஸ்' வென்றது. முதலில் 'ரெய்டு' சென்ற பாட்னாவின் சச்சின், முதல் புள்ளி பெற்றுத்தந்தார். சுதாகர், பாபு, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கைகொடுக்க பாட்னா அணியினர், மும்பை வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் பாட்னா அணி 19-10 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய பாட்னா வீரர்கள், மும்பை அணியினரை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 44-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணி இதுவரை விளையாடிய 20 போட்டியில் 10 வெற்றி, 3 'டை', 7 தோல்வி என 63 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது.