முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
கும்பம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். மனதை வாட்டிக்கொண்டிருந்த பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும். இடம், வீடு வாங்கவும் விற்கவும் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சதயம்: இதுவரை போராட்டமாகவே இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுக்கேற்பட்ட பாதிப்பு விலகும். குழந்தைகள் உடல்நிலை சீராகும்.
பூரட்டாதி 1,2,3: குரு பகவனால் உங்கள் நிலையை உயர்த்துவார். நேற்றைய கனவுகளை நனவாக்குவார். பொன் பொருள் சேரும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். தேர்தலில் போட்டியிட சிலருக்கு வாய்ப்பு வரும்.

























