Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
கும்பம்: தில்லை காளியை வழிபட சங்கடம் விலகும்.

அவிட்டம் 3,4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிலும் போராட்டமாக இருக்கும். உடல்நிலையிலும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். சுற்றி இருப்பவர்களால் சங்கடம் ஏற்படும்.

 சதயம்: நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த வியாபாரம் தொழிலிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் சட்ட சிக்கலுக்கும் ஆளாவீர்கள் என்பதால் அமைதி காப்பது நல்லது.

பூரட்டாதி 1,2,3: எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வருமானக்குறைவின் காரணமாக வீடு, நிலம் என்று விற்று நிலைமையை சரி செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். குடும்பத்தினரிடம் கோபம் வேண்டாம். இந்த நேரத்தில் நிதானம் காப்பது நல்லது. 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us