பெத்தி படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு

ஆனால், "பெத்தி" படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வு ஆணையை தெலுங்கானா அரசு நேற்று இரவு தான் அளித்தது. அதனால், முன்பதிவு அதன்பின்தான் ஆரம்பமானது. அதேசமயம், ஆந்திர அரசு கடந்த வாரமே அரசாணையை பிறப்பித்திருந்தது.
தெலுங்கானா அரசு அளித்த ஆணையில் சிங்கிள் தியேட்டர்கள் 100 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 125 ரூபாயும் உர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து இன்றிரவு 8 மணிக்கு சிறப்பு பிரிமியர் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், ஒரே ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் சுமார் 30 கோடி வரையில் முன்பதிவு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.