
கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் 10 ஆண்டு இடைவெளிக்கு பின் கில்லர் என்ற படத்தை நடித்து தானே இயக்க ஆரம்பித்தார். அப்போதும் கால்ஷீட் பிசி, பல்வேறு பிரச்னைகள் காரணமாக அந்த படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே வந்தது. நேரம் கிடைக்கும் போது தனது கில்லர் படப்பிடிப்பை நடத்தினார்.
இந்த படப்பிடிப்பில் ஜனவரி மாதம் நடந்த விபத்தில் அவருக்கு காலில் அடிபட 15 நாட்கள் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை பெரம்பூர் பின்னி மில் நடந்த சண்டைக்காட்சியின் போது பாம் பிளாஸ்ட் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மதன் என்பவர் உயிரிழக்க, மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
கில்லர் படத்தில் நடக்கும் இரண்டாவது விபத்து இது. ஆக் ஷன் படம் என்பதால் இப்படிப்பட்ட விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. தவிர தலைப்பும் செண்டிமெண்டாக நெகட்டிவாக இருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த விபத்து, உயிர் பலியால் கில்லர் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் மீண்டும் தாமதம் ஆகிறது. பத்தாண்டு இடைவெளிக்கு பின் தான் இயக்கி நடிக்கும் கில்லர் படத்திற்கு வரிசையாக பிரச்னைகள் வருவதால் எஸ்.ஜே சூர்யா அப்செட்டில் இருக்கிறாராம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!