ஷில்பா ஷெட்டி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
ஷில்பா ஷெட்டி
🎂08 Jun 1975· 50 years
50
🎂Age
Actress
🎬Role
பற்றி
பாலிவுட்டின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. 1975ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, மும்பையில் பிறந்த ஷில்பா, சின்ன வயதிலேயே பரதநாட்டியம், விளையாட்டு என கலையில் அதிக ஆர்வம் உடையவர். தனது 16 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த ஷில்பா, அப்படியே 1993ம் ஆண்டு கதா ரஹே மேரா தில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் ரிலீஸாகவில்லை. அதன்பின்னர் அவர் நடித்த பாசிகர் ஹிட்டாக, ஷில்பா பேசப்படும் நடிகையானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்தவர், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். ராஜ்குந்த்ரா என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விவன் ராஜ் குந்த்ரா என்ற மகன் உள்ளார். நடிகையாக மட்டுமல்லது, ஐபிஎல், கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார் ஷில்பா.