லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா?
ஜூன் 03, 2026

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் 23வது படத்தை இயக்குவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியானது.
அனிருத் இசையில் அதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டார்கள். "இரும்புக் கை மாயாவி" கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, நேற்று முதல் இந்தப் படம் டிராப் ஆகிறது என ஒரு தகவல் பரவியது. அதேசமயம் அப்படியெல்லாம் இல்லை, இது ஒரு வதந்தி என்றும் மறுபக்கம் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் தகவல் வெளியானது.
அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கத்தில் "ராக்கா" படத்தில் நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படியான வதந்திகளுக்கு தயாரிப்பு நிறுவனமும், அர்ஜுன், லோகேஷ் தரப்பும் பதிலளிப்பார்களா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.