சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த்

இந்நிலையில் தன்னுடைய நீண்ட கால நண்பரான முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசியுள்ளார் ரஜினி. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஒருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்தும், ஜெயிலர் படத்தின் பணிகள் குறித்தும் சந்திரபாபு நாயுடு ரஜினியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.