ஷாருக்கானின் பதான் பட தமிழ் டிரைலரை வெளியிட்ட விஜய்
ஜன 10, 2023

ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள "பதான்" திரைப்படம் இந்தி ,தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பேஷ்ரம் பாடல் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. இப்படத்தின் டிரைலர் இன்று(ஜன., 10) வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கான டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.