முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
சிம்மம்: சூரியனை வழிபட உங்கள் கோரிக்கை வெற்றியாகும்.
மகம்: கேது தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்துவார். அஷ்டம சனி அஸ்தமனம் ஆகி இருப்பதால் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர். ராசியைப் பார்க்கும் ராகு, செவ்வாய், புதனால் முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
பூரம்: பணவரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெள்ளி அன்று உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
உத்திரம் 1: உங்கள் மனம் குழப்பமடையும். செயல்களில் தடையுண்டாகும். அரசியல் வாதிகளும் அரசு பணியாளர்களும் புதுப்புது பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரிகள் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்கிழமை அதிகாலையில் பயணம் வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 19.3.2026 அதிகாலை 12:00 மணி - 21.3.2026 அதிகாலை 4:14 மணி 
























